Newsஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய தமிழக மாடுபிடி வீரர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய தமிழக மாடுபிடி வீரர் உயிரிழப்பு

-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த நிலையில், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நன்றி தமிழன்

Latest news

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

விக்டோரியாவில் உயிர்களைக் காப்பாற்றும் போது தாக்கப்படும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் துணை மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆம்புலன்ஸ் விக்டோரியா கூறுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் கடந்த மூன்று நாட்களில் ஆம்புலன்ஸ்...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...

விக்டோரியாவில் உயிர்களைக் காப்பாற்றும் போது தாக்கப்படும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் துணை மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆம்புலன்ஸ் விக்டோரியா கூறுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் கடந்த மூன்று நாட்களில் ஆம்புலன்ஸ்...