Newsஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய தமிழக மாடுபிடி வீரர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய தமிழக மாடுபிடி வீரர் உயிரிழப்பு

-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த நிலையில், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நன்றி தமிழன்

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...