ஆஸ்திரேலியாவின் முதல் பொது IVF கிளினிக் மெல்போர்னில் திறக்கப்பட்டுள்ளது.
கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள எந்தவொரு பெண்ணும் அதன் மூலம் இலவச சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளதாக மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
இந்த கிளினிக் Royal Women’s Hospital மற்றும் Monash Health ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு சுமார் 4,000 பெண்கள் சேவைகளைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாண முதல்வர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறுகையில், கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கும், ஆனால் அதிக செலவு காரணமாக சிரமப்படும் பெண்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.
2018 விக்டோரியா தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி 70 மில்லியன் டாலர் செலவில் இந்த கிளினிக் கட்டப்பட்டுள்ளது.