Sports இன்று முதல் T20 போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மோதல்.

இன்று முதல் T20 போட்டியில் இந்தியா – நியூசிலாந்து மோதல்.

-

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை வெள்ளையடிப்G செய்தது.

இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 டி20 தொடரின் முதல் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.

இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

டி20 போட்டியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக சூர்யகுமார் யாதவ் ஜொலிக்கிறார். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தால் கட்டுப்படுத்துவது கடினம். ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற அதிரடி வீரர்களும் உள்ளனர். உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. பந்து வீச்சில் அர்தீப்சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

நியூசிலாந்து டி20 அணிக்கு சான்ட்னர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராஞ்சியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனி நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

இங்கிலாந்தில் வாழும் இந்து மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்,...

கொசுக்கடியால் கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரித்தானியாவில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது....

“கவலைப்படாதே சகோதரா”- நியூசிலாந்து அரசின் புதிய பிரசாரம்!

காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு...

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு...

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம் – விஞ்ஞானிகள் தெரிவித்த முக்கிய விடயம்

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?...