Cinema‘தளபதி 67’ படத்தில் இணையும் கமல்ஹாசன் - விக்ரம்!

‘தளபதி 67’ படத்தில் இணையும் கமல்ஹாசன் – விக்ரம்!

-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பட வேலைகள் தொடங்கி உள்ளது. இது விஜய்க்கு 67-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை விவரங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இதில் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் படத்தில் நடிக்கிறீர்களா என்று பகத் பாசிலிடம் கேட்டபோது, அந்த படத்தில் நானும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். பகத் பாசில் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து இருந்தார். விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் இருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் பகத் பாசில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய தகவல்கள் படி நடிகர் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோரும் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் படத்தில் இணைய உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 67 படத்தின் கிளைமெக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றலாம் என கூறப்படுகிறது.

அதுபோல் நடிகர் விக்ரம் விஜய் படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். தளபதி 67 படத்தில் ஏற்கனவே ஒரு வில்லன் பட்டாளமே இருக்க, விக்ரம் தான் அவர்களுக்கு எல்லாம் தலைமை வில்லனாம்.

லோகேஷ் கனகராஜின் படத்தில் வில்லன்கள் செம மாஸாக வருவார்கள். ஹீரோவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வில்லன்கள் கெத்து காட்டுவார்கள்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜால் தொடங்கபட்டது எக்ஷன்-கிரைம் திரில்லர் உலகமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (எல்.சி.யூ).

லோகேஷ் கனகராஜ் எல்.சி.யூ-வை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில திட்டங்களுடன் முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளார், இதில் முக்கியமாக தொடர்ச்சிகள் மற்றும் ட்விஸ்டுகள் இருக்கும்.

அவரது சமீபத்திய பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ், கைதி மற்றும் விக்ரம் ஆகிய தொடர்ச்சிகள் வரும் என உறுதிபடுத்தி உள்ளார்.

திட்டமிட்டபடி விடயங்கள் நடந்தால், தளபதி 67 வெளியான உடனேயே கைதி 2 தொடங்கும். பின்னர், அவர் விக்ரம் 2 படத்தை தொடங்குவார். இதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கேரகடர் படம் தொடங்கலாம்.

கமல்ஹாசன், கார்த்தி மற்றும் சூர்யா உட்பட எல்.சி. யூ வின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் முந்தைய எல்.சி. யூயில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த மற்றவர்களும் வரவிருக்கும் அனைத்து படங்களிலும் தோன்றக்கூடும்.

நன்றி தமிழன்

Latest news

ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம்...

விக்டோரிய இளைஞர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி

விக்டோரியாவில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் புதிய ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. My Learners Free Lesson...

மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நாட்களாக காணாமல் போன ஆஸ்திரேலிய இளைஞர்

நியூ சவுத் வேல்ஸில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போன மலையேறுபவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்னோவி மலைப் பகுதியில் உள்ள கோஸ்கியுஸ்கோ...

2030-இல் மாற்றமடையும் அதிக தேவையுடைய வேலைத் துறைகள்

2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் அதிக தேவையுடைய வேலைத் துறைகள் மாறும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, 2030 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெலிவரி டிரைவர்கள்,...

எதிர்காலத்தில் பல ஆஸ்திரேலியா பாதுகாப்பு விசாக்கள் நிராகரிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள்

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் Protection Visa (subclass 866) தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான Protection Visa (subclass 866)...