Cinemaமீண்டும் திரைக்கு வருகிறது கமலின் “ஆளவந்தான்”!

மீண்டும் திரைக்கு வருகிறது கமலின் “ஆளவந்தான்”!

-

நடிகர் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் டிஜிட்டல் பதிப்பில் மீண்டும் திரையிரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் எழுதிய ‘தாயம்’ என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வித்யாசமான உளவியல் சிக்கலை பேசும் திரைக்கதையில் உலக நாயகன் கமல் ஹாசன் இரு வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு மாதிரி தோரணையில் நடிப்பை வெளிபடுத்தி மிரட்டியிருப்பார்.

மேலும் இப்படம் பிரம்மாண்டமாகவும் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதால் படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள், கருவிகள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு படமாக்கியிருப்பார்கள். அனிமேஷன் காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று இந்திய சினிமாவில் தனித்துவமான முயற்சியில் இறங்கி பார்வையாளர்களுக்கு வித்யாசமான மற்றும் பிரம்மாண்டமான உணர்வை கொடுப்பதற்காக படக்குழு இறங்கியது.

இருப்பினும், அப்போதைய சூழலில் படக்குழுவினர் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் ஆளவந்தான் படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என நீண்ட நாள்களாகவே கோரிக்கை எழுந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஆளவந்தான் படத்தை விரைவில் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...