Sports 2-வது டி20 தொடரில் இந்தியா, நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.

2-வது டி20 தொடரில் இந்தியா, நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.

-

இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில். முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ஓட்டங்களை  எடுத்தது.

177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் காண்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது.

தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.