News வயதான எலி படைக்க போகும் கின்னஸ் சாதனை!

வயதான எலி படைக்க போகும் கின்னஸ் சாதனை!

-

எலிகளின் ஆயுள் பொதுவாக அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும்.ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது.

இந்த எலியே, இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எலி தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிக நாள் வாழ்ந்த எலி என்று நம்பப்படும் பசிபிக் பாக்கெட் எலிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைக்கப் போவதாக சான் டியாகோ உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013ம் ஆண்டு ஜூலை 12ம் திகதியன்று உயிரியல் பூங்காவில் பிறந்த எலிக்கு, நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் என்று பெயரிடப்பட்டது. இந்த சிறப்பான எலியின் நீண்ட ஆயுளைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தப்போவதாக வனவிலங்குக் கூட்டமைப்பு கூறியது.

மனிதப் பராமரிப்பில் வாழும் பழமையான எலி என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த எலி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த எலியின் வயதை சரிபார்க்க புறுசு நடுவர் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

பசிபிக் பாக்கெட் மவுஸ் என்பது வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும், அருகி வரும் இந்த இனத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையானது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுவியது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.