Cinemaடி.பி.கஜேந்திரன் மறைவு - கல்லூரி நண்பர் முதல்வர் மு.க ஸ்டாலின்...

டி.பி.கஜேந்திரன் மறைவு – கல்லூரி நண்பர் முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!

-

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் டி.பி.கஜேந்திரன் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கல்லூரித் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.பி.கஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்துவந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று (05) காலை டி.பி.கஜேந்திரன் உயிர் பிரிந்தது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரபல இயக்குனரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.

தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு

Bondi பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நேற்று இரவு செனட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும்...

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

சிட்னியில் அதிகரித்து வரும் சுறா தாக்குதல்கள்

கடந்த 60 ஆண்டுகளில் சிட்னியில் சுறா தாக்குதல் எதுவும் நடந்ததில்லை, ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுபோன்ற சுறா தாக்குதல்களால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...