Newsஇதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது - துருக்கி ஜனாதிபதி

இதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது – துருக்கி ஜனாதிபதி

-

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

நிலநடுக்கத்தால் தற்போதைய நிலவரப்படி துருக்கியில் 9 ,057 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 2, 992 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12, 0 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள், நிலநடுக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி தாயூப் எர்டோகன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

அவர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. கடும் விமர்சனங்களை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையமாக இருந்த ஹரமனமராஸ் நகரில் ஜனாதிபதி எர்டோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

நன்றி தமிழன்

Latest news

குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய ஒரு புதிய வழி

இளம் குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதில் பல் மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் AI தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது. மின்சார பல் துலக்குதலைப் போல...

Westpac சேவை நிறுத்தம் – ஆயிரக்கணக்கானோருக்கு சேவை சிக்கல்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றானWestpac-ல் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி மற்றும் EFTPOS ஐ அணுக முடியவில்லை. பிரச்சனை என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அமைச்சர்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வி மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜூலியன்...

வார இறுதி விநியோகங்களை மீண்டும் தொடங்கும் Australia Post

கிறிஸ்துமஸுக்கு முன்பு 100 மில்லியன் பார்சல்களை வழங்க Australia Post தயாராகி வருகிறது. பண்டிகைக் காலத்தில் பார்சல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தலைநகரங்கள் மற்றும்...

வார இறுதி விநியோகங்களை மீண்டும் தொடங்கும் Australia Post

கிறிஸ்துமஸுக்கு முன்பு 100 மில்லியன் பார்சல்களை வழங்க Australia Post தயாராகி வருகிறது. பண்டிகைக் காலத்தில் பார்சல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தலைநகரங்கள் மற்றும்...

விக்டோரியாவின் பிரபலமான Panda Mart-ஐ மூட உத்தரவு

விக்டோரியாவில் உள்ள Panda Mart சில்லறை விற்பனைக் கடைகள் அவசர நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சட்டவிரோத பொருட்கள் அலமாரிகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம்...