Newsகொரோனா தோற்றம் குறித்து அனைத்து நாடுகளும் தெரிந்த விபரங்களை வெளியிட வேண்டும்!

கொரோனா தோற்றம் குறித்து அனைத்து நாடுகளும் தெரிந்த விபரங்களை வெளியிட வேண்டும்!

-

உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. 

சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த வைரசானது தோற்றுவிக்கப்பட்டுள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின. 

அமெரிக்காவின் எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, சமீபத்தில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் பற்றி எங்களது அமைப்பு நடத்திய புலனாய்வில், அது உகான் நகரில் உள்ள ஆற்றல்மிக்க ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்க கூடும் என கூறினார். 

இது எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரசாரம் என கூறி சீனா அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 

இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவிக்கையில்,

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி தங்களுக்கு என்ன விவரங்கள் தெரியுமோ, அவற்றை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்திடம் பகிர்ந்து கொள்வது அவசியம் ஆகிறது என டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியுள்ளார். 

நாம் பழி போடும் விசயங்களை விட்டு, விட்டு இந்த பெருந்தொற்று எப்படி தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலில் முன்னேற்றம் அடைய வேண்டும். 

அதனால், வருங்காலத்தில் ஏற்பட கூடிய இதுபோன்ற நோய் தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுகளை தடுக்க முடிவதுடன், நாம் அதற்கு தயாராகவும், அவற்றை எதிர்கொள்ளவும் முடியும் என கூறியுள்ளார். 

கொரோனா வைரசானது எப்படி வந்தது? மற்றும் மனிதர்களிடையே எப்படி பரவ தொடங்கியது? என்பது பற்றிய அறியப்படாத விசயங்களை அறிந்து கொள்வது, வருங்கால பெருந்தொற்றுகளை தவிர்ப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். 

சமீபத்தில் சீனாவின் உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றின் வழியே, ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளேன். ஏனெனில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது? என்பது பற்றிய தகவலில் வெளிப்படை தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவையாகவுள்ளது என கேட்டு கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரிகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Deepfake Photo செயலிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளுக்கு Nudify செயலிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் Deepfake படங்கள் பற்றிய அறிக்கைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக...

ஆஸ்திரேலிய பணியிடங்களில் அதிகரித்துள்ள சுய பரிசோதனை மருந்து கருவிகளுக்கான தேவை

ஆஸ்திரேலிய பணியிடங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், தனிப்பட்ட போதைப்பொருள் சுய பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, cocaine,...

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலை சிங்கத்தால் கையை இழந்த பெண்

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் 50 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Toowoomba-இற்கு அருகிலுள்ள பிரபலமான...

பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார்

அன்புடன் சமைக்கும் கலையைக் கற்றுக் கொடுத்த பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார். அவர் இறக்கும் போது 89 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. Peter Russell-Clarke ஒரு சமையல்காரர்,...

சிறப்பு உணவுகளின் விலைகளை உயர்த்தும் இரு பெரிய பல்பொருள் அங்காடிகள்

Coles மற்றும் Woolworths-இல் விற்கப்படும் பிரபலமான பிரதான உணவான paprikaவின் விலை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் மிளகுத்தூளின் மொத்த விலை சுமார்...