Newsகைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் - நித்யானந்தா அறிவிப்பு

கைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் – நித்யானந்தா அறிவிப்பு

-

நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.நா.மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கைலாசா பெண் பிரதிநிதிகள் பேசிய உரை ஏற்றுக்கொள்ளப்படாது என ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கைலாசா நாட்டிற்கு ஐ.நா.சபை அங்கீகாரம் அளித்துள்ளதா என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் கைலாசா பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் நித்யானந்தா அவற்றை பற்றி கவலைப்படவில்லை.

மாறாக கைலாசா பற்றிய புதிய அறிவிப்புகளை அறிவித்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் நித்யானந்தா நிறுவி உள்ள கைலாசாவிற்கு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார். மேலும் கைலாசாவின் ஐக்கிய மாகாணங்களில் இலவச மின்குடியுரிமைக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம் என கைலாசாவின் சமூகவலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், உலகம் எங்கிலும் உள்ள இந்துக்களுக்கு என்று உருவாகி இருக்கும் நாடு கைலாசா. எனவே உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற வேண்டும். அதனால் அவர்கள் இ-குடியுரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த இ-குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/ என்ற சிறப்பு இணைய தளமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. https://kailaasa.org/e-citizen/ என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து விபரங்களை பூர்த்தி செய்தால் கைலாசா நாட்டின் இ-குடியுரிமையை பெறலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...