Newsபூமியின் மையத்தை ஆராய்ந்தவர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி

பூமியின் மையத்தை ஆராய்ந்தவர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி

-

பூமியின் மையத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடிக்காத புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.

நமது பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான்.

சமீபத்தில் இந்த நெருப்பு கோளம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது.

இந்த கோளம் தனியாக உட்பகுதியில் சுற்றிக்கொண்டு இருக்கும். அதாவது ஒரு பந்துக்குள் இன்னொரு பந்து இருப்பதைப் போன்றது.

மேலே இருக்கும் பந்து ஒரு வேகத்தில் சுற்றுகிறது. உள்ளே இருக்கும் பந்து இன்னொரு வேகத்தில் சுற்றுகிறது. அப்படிதான் பூமியின் மையத்தில் இருக்கும் இந்த கோளமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில் பூமி மையத்தில் இருக்கும் கோளத்திற்கு உள்ளே இன்னொரு கோளம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 

Nature Communications என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியாகி இருக்கும் கட்டுரையில் இந்த தகவல் இடம்பெற்று உள்ளது. 

தற்போது வரை பூமியில் crust அதாவது வெளிப்பகுதி, mantle என்ற உட்பகுதி , outer core என்ற உட்கோளத்திற்கு மேலே இருக்கும் பகுதி, கடைசியாக inner core என்று அழைக்கப்படும் மையப்பகுதி உட்கோளம்.

பூமியில் இதுவரை இந்த 4 லேயர்கள்தான் இருந்தன. தற்போது 5வதாக ஒரு லேயர் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது உட்கோளத்தின் மையத்தில் இன்னொரு கோளம் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோளம் மர்ம உலோகம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். 

மிக தெளிவாக உள்ளே ஒரு உலோகம் இருப்பதை இவர்கள் கண்டுபிடித்து உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த உலோகத்தின் பண்புகள் தெரியவில்லை. அந்த மைய உலோகம் சுற்றுகிறதா என்றும் இதுவரை தெரியவில்லை அதை பற்றி தற்போதுதான் ஆய்வு செய்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் அதன் பண்புகள் தெரிய வரும் என்று இந்த ஆய்வை நடத்திய கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தான்-சன் பாம் தெரிவித்துள்ளார். 

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...