அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் கல்வி பயிலுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய ஒப்பந்தம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் பெற்ற கல்வித் தகுதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெற்ற கல்வித் தகுதிகள் இந்தியாவில் அதிகரிக்கப்பட உள்ளது.
கல்வித் துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எடுக்கப்பட்ட முக்கிய முடிவு இது என்று பிரதமர் அல்பானீஸ் குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை திறக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் 04 வருட காலத்திற்கு கல்வி கற்க புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.