News100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

-

வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

கொரிய போர் கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடைபெற்ற போர் கொரிய போர் என்று அழைக்கப்படுகின்றது. 

இந்த போரில் இருநாடுகளுக்குமே வெளிநாடுகளின் ஆதரவு இருந்தது. வடகொரியாவை சீனா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியம் ஆதரித்தது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஆதரவு அளித்தன. 

குறிப்பாக இந்த போரில் தென்கொரியாவுக்கு பெரும் பக்கபலமாக இருந்த அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் வடகொரியா மீது ஏராளமான குண்டுகளை வீசின. அதிகமான குண்டுகள் 2-ம் உலகப்போரின் போது ஒட்டுமொத்த கிழக்கு ஆசியாவிலும் வீசியதைவிட அதிகமான குண்டுகளை வடகொரியா மீது அமெரிக்கா வீசியதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட கொரிய போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்த நிலையில், கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு அப்படி பியாங்யாங்கில் உள்ள ஒரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக குழி தோண்டியபோது அங்கு 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 

அவை இனைத்தும் கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன. 

செயலிழக்க செய்தனர் பின்னர் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். 

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், வடகொரியாவில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...