News 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டெடுத்த வடகொரியா

-

வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

கொரிய போர் கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடைபெற்ற போர் கொரிய போர் என்று அழைக்கப்படுகின்றது. 

இந்த போரில் இருநாடுகளுக்குமே வெளிநாடுகளின் ஆதரவு இருந்தது. வடகொரியாவை சீனா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியம் ஆதரித்தது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஆதரவு அளித்தன. 

குறிப்பாக இந்த போரில் தென்கொரியாவுக்கு பெரும் பக்கபலமாக இருந்த அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் வடகொரியா மீது ஏராளமான குண்டுகளை வீசின. அதிகமான குண்டுகள் 2-ம் உலகப்போரின் போது ஒட்டுமொத்த கிழக்கு ஆசியாவிலும் வீசியதைவிட அதிகமான குண்டுகளை வடகொரியா மீது அமெரிக்கா வீசியதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட கொரிய போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்த நிலையில், கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு அப்படி பியாங்யாங்கில் உள்ள ஒரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக குழி தோண்டியபோது அங்கு 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 

அவை இனைத்தும் கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன. 

செயலிழக்க செய்தனர் பின்னர் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். 

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், வடகொரியாவில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இங்கிலாந்தில் வாழும் இந்து மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்,...

கொசுக்கடியால் கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரித்தானியாவில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது....

“கவலைப்படாதே சகோதரா”- நியூசிலாந்து அரசின் புதிய பிரசாரம்!

காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு...

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு...

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம் – விஞ்ஞானிகள் தெரிவித்த முக்கிய விடயம்

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?...