Newsஅமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

அமெரிக்காவில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இந்தியர்கள் இருவர் நியமனம்

-

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசாங்க துறைகளில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கினை வகித்து வருகின்றனர். 

இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது தனது நிர்வாகத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார். 

இதில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒருவரது பெயர் ரேவதி அத்வைதி. மற்றொருவர் பெயர் மனீஷ் பாப்னா. இவர்களில் ரேவதி அத்வைதி பிளக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். 

எம்.பி.ஏ. படித்து உள்ள இவர் 2019-ம் ஆண்டில் உற்பத்தியில் புதிய சகாப்தம் படைத்தார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இவர் இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்ட ஈட்டனின் மின்சார துறை வணிகத்திற்கான தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார். 

இவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பார்ச்சூனின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். அதற்கான பட்டியலிலும் அவர் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மற்றொரு இந்தியரான மனீஷ் பாப்னா இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். 

இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் அரசியல், பொருளாதார வளர்ச்சியில் முதுகலைப்பட்டங்களையும் எம்.ஐ.டியில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

நன்றி தமிழன்

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

மெல்பேர்ணில் இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு கிராமத்தை வாங்கலாம்!

மெல்பேர்ணில் உள்ள இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு முழு கிராமத்தையும் வழங்கும் ஒரு தனித்துவமான சொத்து ஒப்பந்தம் Mount Dandenong-இல் நடைபெறுகிறது. மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...