Breaking News26 வயது இளைஞரின் வயிற்றில் வொட்கா போத்தல் - மருத்துவர்கள் அதிர்ச்சி

26 வயது இளைஞரின் வயிற்றில் வொட்கா போத்தல் – மருத்துவர்கள் அதிர்ச்சி

-

நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து வொட்கா போத்தல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

நேபாளத்தில் குஜாரா நகராட்சியை சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவரின் வயிற்றில் போத்தல் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பின்னர் இரண்டரை மணித்தியால அறுவை சிகிச்சைக்கு பிறகு நுர்சத் மன்சூரியின் வயிற்றில் இருந்த வொட்கா போத்தலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 

போத்தல் அவரது குடலைத் துண்டித்து, மலக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

மன்சூரியின் நண்பர்கள் அவரைக் குடிக்க வைத்துவிட்டு, ஆசனவாய் வழியாக போத்தலை வயிற்றுக்குள் வலுக் கட்டாயமாக திணித் திருக்கலாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மன்சூரியின் நண்பர்கள் சிலரிடமும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...