News அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு

அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு

-

அமெரிக்காவில் உள்ள சிகாகோ ஆறு, புனித பாட்ரிக் பண்டிகையை ஒட்டி பச்சை நிறமாக மாறியுள்ளது, பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில், 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதகுருவான புனித பாட்ரிக்கை நினைவு படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 17ல் புனித பாட்ரிக் தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த கொண்டாட்டத்தின்போது, இங்குள்ள மக்கள் பச்சை நிற ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக, சிகாகோ நகரில் பாயும் சிகாகோ ஆற்றை பச்சை நிறமாக மாற்றும் பணி நேற்று நடந்தது. 

பெரிய படகுகளில் எடுத்து வரப்பட்ட மோட்டார்கள் வாயிலாக பச்சை நிற சாயம் ஆற்றில் கலக்கப்பட்டது. 

பச்சையாக மாறியுள்ள சிகாகோ ஆற்றை காண, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் ஆர்வமுடன் இங்கு குவிந்து வருகின்றனர். 

வண்ணமயமாக மாறிய ஆற்றைக் காண வந்தவர்கள், தங்கள் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு பச்சை நிறம் பூசி மகிழ்ந்தனர்.

கடந்த 1962-ம் ஆண்டு முதல் ஆற்றில் பச்சை சாயம் பூசுவது நடந்து வரும் சூழலில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக புனித பாட்ரிக் தினக் கொண்டாட்டம் தடைபட்டு, ஆற்றில் சாயம் கலப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த சாயம் குறைந்தது ஒரு வாரத்துக்கு ஆற்றை பச்சை நிறமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.