அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் விமானக் கட்டணங்கள் காரணமாக இந்த ஆண்டு விடுமுறை மற்றும் பயணங்களை மேற்கொள்வதை மறுபரிசீலனை செய்ய பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு 87 சதவீதம் பேர் உள்நாடு அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர்களில் 83 சதவீதம் பேர் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் எந்த வகையிலும் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என வலியுறுத்தியுள்ளனர்.
37 சதவீதம் பேர் வேறு மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதேவேளை, உடல்நலக் காப்புறுதியுடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.