Newsஜப்பான் கடலில் பாய்ந்த ஏவுகணை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜப்பான் கடலில் பாய்ந்த ஏவுகணை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

-

ஜப்பான் கடல் பரப்பில் வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியா மீண்டும் கடலோர நகரமான சின்போவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியுள்ளது என்று தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS)தெரிவித்துள்ளனர்.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக JCS தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த ஏவுகணை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் “கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் முழு தயார் நிலையையும் பேணி வருகிறது” என்றும் தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS) தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய இராணுவ போர் பயிற்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வட கொரியா தங்களது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை விண்ணில் ஏவி சோதித்து இருந்தது. இது நிலையற்ற தாக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் நடக்கும் மோசடி

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மிகவும் பொதுவானதாகி வருகிறது. அதனுடன், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரநிலைகளை...

அழிந்துவரும் மூன்று கங்காரு இனங்கள் அடையாளம்

ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அழிந்து வரும் மூன்று வகையான கங்காருக்களை அடையாளம் கண்டுள்ளது. 5 மில்லியன் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்...

நாய்களுக்கும் எளிதான ஒரு சிறப்பு விமான நிறுவனம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று நாய்களுக்காக மட்டுமே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி பார்க் ஏர் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழு

மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆசிரியர் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் தொழில்முறை நடவடிக்கையை அணுகுவதாக கூறுகின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வேலைநிறுத்தப்...