Cinemaபழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்!

பழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்!

-

பிரபல தொலைக்காட்சி நாடகமான “தி வயர்” மற்றும் “ஜோன் விக்” என்ற அதிரடி திரைப்படத் தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் தனது 60ஆவது வயதில் நேற்று காலமானார்.

ரெட்டிக்கின் மரணம் குறித்து சக நடிகை மியா ஹேன்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரெட்டிக் நேற்று (17) இயற்கை எய்தியதாக தெரிவித்துள்ளார். அவரது மரணம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ள TMZ இணையத்தளம், லொஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ சிட்டி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ரெடிக் தனது இறுதி மூச்சை விட்டதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், “ஜோன் விக்” அதிரடி திரைப்படத் தொடரின் நான்காவது பாகம் எதிர்வரும் மார்ச் 24 திகதி வெளிவரவுள்ள தருணத்தில், சில நாட்களுக்கு முன்னதாகவே நடிகரின் மரணம் நிகழ்ந்தமை கலையுலகில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...