Cinemaபழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்!

பழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்!

-

பிரபல தொலைக்காட்சி நாடகமான “தி வயர்” மற்றும் “ஜோன் விக்” என்ற அதிரடி திரைப்படத் தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் தனது 60ஆவது வயதில் நேற்று காலமானார்.

ரெட்டிக்கின் மரணம் குறித்து சக நடிகை மியா ஹேன்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரெட்டிக் நேற்று (17) இயற்கை எய்தியதாக தெரிவித்துள்ளார். அவரது மரணம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ள TMZ இணையத்தளம், லொஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ சிட்டி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ரெடிக் தனது இறுதி மூச்சை விட்டதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், “ஜோன் விக்” அதிரடி திரைப்படத் தொடரின் நான்காவது பாகம் எதிர்வரும் மார்ச் 24 திகதி வெளிவரவுள்ள தருணத்தில், சில நாட்களுக்கு முன்னதாகவே நடிகரின் மரணம் நிகழ்ந்தமை கலையுலகில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இணைந்துள்ள இலங்கை பொறியாளர்

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நிறுவனங்களின் சர்வதேச பல்கலைக்கழகம் RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இலங்கை பொறியாளர் ஒருவரும் இணைந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவின்...

மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ள விண்கலம்

பல மாதங்களாக செயல்படாமல் இருந்த Voyager-1 விண்கலம் மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து படிக்கக்கூடிய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. Voyager-1 ஆய்வு பல மாதங்களாக செயலிழந்த பிறகு...

உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம்பிடித்துள்ள இலங்கைப் பெண்

டைம்ஸ் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் இலங்கைப் பெண்ணான ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமற்கிருத சமூகத்திற்காக உரத்த...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா ஐஸ் போதைப்பொருளுக்கு உலகில் அதிக லாபம் ஈட்டும் சந்தையாகக் கருதப்படுவதோடு, பனிக்கட்டிகளுக்கு மேலதிகமாக,...

தடைசெய்யப்பட்ட சிட்னி கேசினோ கிளப்பிற்கு பச்சை விளக்கு

தடை செய்யப்பட்ட கிரவுன் கேசினோ கிளப் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சூதாட்ட விடுதியாக...

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுக்கு வேலை தேடுவதற்கான வழிகாட்டி

அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டின் வேலைச் சந்தையில் புதிய வேலைவாய்ப்பை விரைவாகக் கண்டறிய தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை,...