உலகிலேயே குடிநீருக்கு இரண்டாவது அதிக விலை கொடுக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.
இலங்கையில் சராசரியாக ஒருவர் வருடத்தில் சுமார் 504 லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் அதன் பெறுமதி கிட்டத்தட்ட 580 டொலர்கள் எனவும் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்த எண்ணிக்கை சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் குடிநீருக்கான விலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகவும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 04 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போத்தல் நீர் உற்பத்தி செய்யும் நாடுகளில் அவுஸ்திரேலியா தற்போது 10வது இடத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.