News30 அமெரிக்க நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கைலாசா!

30 அமெரிக்க நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கைலாசா!

-

இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். நித்யானந்தாவின் ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா’ 30 அமெரிக்க நகரங்களுடன் ‘கலாச்சார கூட்டாண்மை’ ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம் கற்பனையான நாட்டுடனான ‘சகோதரி நகரம்’ ( Sister City) ஒப்பந்தத்தை இரத்து செய்ததாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. நெவார்க் மற்றும் கற்பனை நாடான ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா’ இடையே சகோதர-நகர ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரி 12 அன்று நடந்ததோடு, இதற்கான விழா ஒன்று நெவார்க்கில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கைலாசா 2019ஆம் ஆண்டு நித்யானந்தாவால் நிறுவப்பட்டது

2019 ஆம் ஆண்டில், நித்யானந்தா ‘யுனைடெட் ஸ்டேட் கைலாசா’ ஸ்தாபனத்தை அறிவித்தார். அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில், 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் கற்பனையான கைலாசா நாட்டுடன் கலாச்சார கூட்டு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இந்த நகரங்களில் ரிச்மண்ட், வர்ஜீனியா, ஓஹியோ, டேடன் மற்றும் பியூனா பார்க் ஆகியவை அடங்கும் என வலைதள செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரம்

மேயர்களோ, நகரசபை உறுப்பினர்கள்மட்டுமின்றி, நாடாளும்மன்ற உறுப்பினர்களும் ஏமாந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைலாசா நாட்டிற்கு ‘சிறப்பு காங்கிரஸின் அங்கீகாரம்’ வழங்கியுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. இந்த காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த நார்மா டோரஸ்.

கைலாசா மீது அமெரிக்க ஊடகங்களின் கண்காணிப்பு

வியாழனன்று வெளியான Fox News அறிக்கை ஒன்றில், நித்தியானந்தா ஏமாற்றிய நகரங்களின் நீண்ட பட்டியலைக் கொண்ட மிக உயர்ந்த போலி பாபாவை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. கைலாசா தொடர்பான எங்கள் அறிவிப்புகள் எந்த வகையிலும் ஒப்புதல்கள் ஆகாது. அவை ஒரு கோரிக்கைக்கான பதில் மட்டுமே என மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து சில நகர நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது உண்மைதான் என கூறியுள்ள நிலையில், இது மிகப் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.

ஒப்பந்தத்தை இரத்து செய்த நெவார்க் 

இந்த மாத தொடக்கத்தில், நெவார்க் நகரத்தின் தகவல் தொடர்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் சூசன் கரோஃபாலோ, கைலாசாவைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றி அறிந்தவுடன், நெவார்க் நகரம் விரைவாகச் செயல்பட்டு, சகோதரி நகர ( Sister City) ஒப்பந்தத்தை இரத்து செய்தது. நித்யானந்தா பல கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இந்தியாவில் தேடப்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ள விவகாரத்தில் வரும் நாட்களில் மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல போலியான ஒப்பந்தங்களை போட்டு, அப்போது எடுக்கப்பட்ட படங்களை வைத்து, இணையத்தில் கைலாசா அங்கீகரிக்கப்பட்ட நாடு என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த நித்தியானந்தா முயல்வதாக குற்றசாட்டுகளும் எழுந்துள்ளன.

நன்றி தமிழன்

Latest news

Bondi தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.  Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...