News உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பு

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பு

-

கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கின்றது. 

கொரோனாவின் ஆரம்ப காலத்தில், உகான் நகரத்தில் ஹவானன் சந்தைதான், தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்து எச்சரித்துள்ளது. 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும்.

இந்தத் தரவுகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.