Newsஉலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பு

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பு

-

கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கின்றது. 

கொரோனாவின் ஆரம்ப காலத்தில், உகான் நகரத்தில் ஹவானன் சந்தைதான், தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்து எச்சரித்துள்ளது. 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும்.

இந்தத் தரவுகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...