உலக நாடுகளை அச்சுறுத்தும் நிகழ்வுகளில் பயங்கரவாதம் முக்கியமான ஒன்றாகும். இது பொதுமக்களின் அமைதியை முற்றிலும் சீர்குலைக்கின்றது.
அது மட்டுமின்றி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் சவாலாக உள்ளது. எனவே பயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா. மற்றும் பல தனியார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நிறுவனம் சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலை வெளியிட்டு வருகின்றது.
அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
தெற்கு ஆசியாவில் அதிக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்ற நாடுகளில் கடந்த 2017 முதல் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை பிடித்திருந்தது.
தற்போது அந்த இடத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இது 6-வது இடமாகும். கடந்த 2022-ல் மட்டும் பயங்கரவாத சம்பவங்கள் மூலம் அங்கு 643 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழன்