Newsபயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!

பயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!

-

உலக நாடுகளை அச்சுறுத்தும் நிகழ்வுகளில் பயங்கரவாதம் முக்கியமான ஒன்றாகும். இது பொதுமக்களின் அமைதியை முற்றிலும் சீர்குலைக்கின்றது. 

அது மட்டுமின்றி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் சவாலாக உள்ளது. எனவே பயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா. மற்றும் பல தனியார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

அந்த வகையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நிறுவனம் சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலை வெளியிட்டு வருகின்றது. 

அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.

தெற்கு ஆசியாவில் அதிக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்ற நாடுகளில் கடந்த 2017 முதல் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை பிடித்திருந்தது. 

தற்போது அந்த இடத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இது 6-வது இடமாகும். கடந்த 2022-ல் மட்டும் பயங்கரவாத சம்பவங்கள் மூலம் அங்கு 643 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விமானத்தில் பாதுகாப்பான இருக்கை எது?

விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை என்பது நிபுணர்களிடையே அதிக விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் அதிசயமாக உயிர்...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் சிக்கல்கள்

ஓய்வு பெறும் வயது வரை வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 முதல், ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயது 65 வயதிலிருந்து...

கடும் வெப்பத்தால் காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

டெக்சாஸில் ஒரு காரில் விடப்பட்ட ஒரு சிறுமி கடுமையான வெப்பத்தால் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் Galena Park-இல் நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது,...

திரும்பப் பெறப்பட்ட இணையத்தில் விற்கப்பட்ட இரு குழந்தை தயாரிப்புகள்

Ezone இணையதளத்தில் விற்கப்படும் இரண்டு குழந்தைப் பொருட்களை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் (ACCC) அவை குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 4 பெண்கள்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் சட்டவிரோதமாக spicy drugs எனப்படும் மருந்துகளை இறக்குமதி செய்ததற்காக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் 18 வயது சிறுமிகள் என்று...

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...