நியூ சவுத் வேல்ஸ் சுகாதார தொழிற்சங்கங்கள் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த சுகாதாரத் துறையின் உத்தரவுகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
அதன்படி, 18 வயதுக்கும் 85 வயதுக்கும் இடைப்பட்ட ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரும்போது, அவரது உடல்நிலை ஆபத்தானதாக இல்லாவிட்டால், அந்த நோயாளிக்கு அளிக்கப்படும் கவனம் குறைக்கப்பட வேண்டும்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அந்த நேரத்தை பயன்படுத்த முடியும் என்பதே சுகாதாரத்துறையினரின் நிலைப்பாடு.
சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றினால் நோயாளர் பராமரிப்பு சேவைகளில் பாரிய தாமதம் ஏற்படக்கூடும் என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இல்லையெனில், கிட்டத்தட்ட 12,000 நியூ சவுத் வேல்ஸ் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.