News சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

-

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகின்றது. 

இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

அதிகாலை நேரத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து பல ஏவுகணைகளை வீசின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. 

அதே சமயம் ஏவுகணைகள் தாக்கியதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகள் வந்து சேரும் முக்கிய வழித்தடமாக அலெப்போ சர்வதேச விமான நிலையம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.