Sportsஉலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

உலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

-

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டி ஆக்லாந்து நேரப்படி மதியம் 02:00 மணிக்கு அல்லது மெல்போர்ன் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு தொடங்கும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு இலங்கை நேரடியாக தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பும் இதுவாகும்.

இன்று ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 03 போட்டிகள் உள்ளடங்குவதுடன், இந்த மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால், எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இரண்டு வருடங்களின் பின்னர் இன்றைய போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏஞ்சலோ மெத்தியூஸ் களமிறங்க உள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான 100வது ஒருநாள் போட்டியாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 99 ஒரு நாள் போட்டிகளில், நியூசிலாந்து 49 போட்டிகளிலும், இலங்கை 41 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை அணி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றியை பதிவு செய்யவில்லை.

அத்துடன், சனத் ஜெயசூர்யா தலைமையில் 2001ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கடைசியாக வெற்றி பெற்றது.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து...

வரலாற்றில் முதல் முறையாக குறைந்துள்ள Tesla-வின் ஆண்டு விற்பனை

வரலாற்றில் முதன்முறையாக Tesla நிறுவனம் தனது வருடாந்த விற்பனை வீழ்ச்சியை 2ம் திகதி பதிவு செய்துள்ளது. அதிகரித்த போட்டி மற்றும் EVகளுக்கான மந்தமான தேவை காரணமாக விற்பனை...

ஜனவரியில் விக்டோரியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்

ஜனவரியில் விக்டோரியாவில் தவறவிடக்கூடாத இடங்கள் குறித்த அறிக்கையை timeout சமர்ப்பித்துள்ளார். இவற்றில் விக்டோரியாவில் வாழும் பலர் கூட இதுவரை சென்றிராத இடங்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியாவில் கடற்கரையிலிருந்து தேசிய...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சிறியரக விமானம் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அதன்படி, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் சிறிய...