Newsஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 மாணவர்கள் உட்பட 6 பேர்...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

-

நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் மூன்று மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஷ்வில் பகுதியைச் சேர்ந்த ஆட்ரி எலிசபெத் ஹேல் என்றும், அவர் ஒரு காலத்தில் அதே பள்ளியில் படித்தவர் என்றும் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக மழலையர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படிக்கும் பிரஸ்பைடிரியன் பள்ளியான தி கோவனன்ட் பள்ளியில் இந்த வன்முறை ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு டெக்சாஸ், உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த படுகொலை உட்பட, நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் பள்ளி வன்முறைகளின் தொடர்ச்சியால் தத்தளித்து வரும் நிலையில் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

விக்டோரியாவில் உயிர்களைக் காப்பாற்றும் போது தாக்கப்படும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் துணை மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆம்புலன்ஸ் விக்டோரியா கூறுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் கடந்த மூன்று நாட்களில் ஆம்புலன்ஸ்...

குயின்ஸ்லாந்தில் கனமழை – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் வரும் நாட்களில் மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வடமேற்கில் உள்ள நார்மண்டனில் உள்ள வளைகுடா...