Newsஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 மாணவர்கள் உட்பட 6 பேர்...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

-

நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் மூன்று மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஷ்வில் பகுதியைச் சேர்ந்த ஆட்ரி எலிசபெத் ஹேல் என்றும், அவர் ஒரு காலத்தில் அதே பள்ளியில் படித்தவர் என்றும் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக மழலையர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படிக்கும் பிரஸ்பைடிரியன் பள்ளியான தி கோவனன்ட் பள்ளியில் இந்த வன்முறை ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு டெக்சாஸ், உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த படுகொலை உட்பட, நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் பள்ளி வன்முறைகளின் தொடர்ச்சியால் தத்தளித்து வரும் நிலையில் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தமைக்கான கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில்,...

ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகள் இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல்...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...