பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மானிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
அந்த மானியம் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் உட்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
ஆனால், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச மானிய பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தமிழன்