Newsஅமெரிக்காவை தாக்கிய சூறாவளி - பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி – பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

-

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிர தன்மையை குறைக்க அரசாங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக வருகின்ற 10 ஆம் திகதி வரை வானிலை ஆய்வு மையம் அங்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த புயல் காற்று வீசியுள்ளது.

இதனால் ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. மேலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதேபோல் சாலைகளில் விழுந்த மரங்களால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த புயல் காற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...