Newsஆஸ்திரேலியாவின் முதியவர்களில் 80% பேர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியாவின் முதியவர்களில் 80% பேர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல்

-

அவுஸ்திரேலியாவின் முதியோர்களில் 80 வீதமானோர் வாழ்க்கைச் செலவில் விரைவான அதிகரிப்பு காரணமாக கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதையும் உள்ளடக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட 5,700 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள், எரிபொருள் உள்ளிட்ட எரிசக்திக் கட்டணங்கள், சுகாதாரச் செலவுகள் என்பன முக்கியப் பிரச்சினைகளாக இருப்பதுடன் வீட்டுப் பிரச்சினையும் கவனம் செலுத்த வேண்டிய விடயம் என கணக்கெடுப்பில் பங்களித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொலைதூர பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை அதிகரிக்காமல் காலாண்டுக்கு ஒருமுறை அதாவது வருடத்திற்கு 04 முறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...