Sportsடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி -...

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி – IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ஓட்டங்களை குவித்தது. 

தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ஓட்டங்கள் விளாசினார். 

நிகோலஸ் பூரன் 36 ஓட்டங்கள் எடுத்தார். டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 194 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. 

அணித்தலைவரும், தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். 

அவர் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரூசோவ் 30 ஓட்டங்களில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கடைசி கட்டத்தில் அக்சர் படேல் 16 ஓட்டங்கள் எடுத்தார். லக்னோ அணி சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இறுதியில், டெல்லி அணி 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோற்றது. 

இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் வெற்றியை பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...