Sportsலக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்...

லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் போட்டி சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது. 

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. 

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ஓட்டங்கள் எடுத்தது. 

அந்த அணியின் ருதுராஜ் கெயிக்வாட் அரை சதமடித்து 57 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். டேவன் கான்வே 29 பந்தில் 47 ஓட்டங்கள் குவித்தார். ஷிவம் டுபே, ராயுடு ஆகியோர் 27 ஓட்டங்கள் எடுத்தனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சார்பில் மார்க் வுட், ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அதிரடியில் மிரட்டினார். அவர் 22 பந்தில் 2 சிச்கர், 8 பவுண்டரி உட்பட 53 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல் ஜோடி 79 ஓட்டங்கள் சேர்த்தது. 

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பூரன் 32 ஓட்டங்கள், ஆயுஷ் பதோனி 23 ஓட்டங்கள், ஸ்டோய்னிஸ் 21 ஓட்டங்கள், கே.எல்.ராகுல் 20 ஓட்டங்கள் எடுத்தனர். 

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 205 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணி சார்பில் மொயீன் அலி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...