News கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

-

உலக பொருளாதாரம் மந்த நிலையின் ஒரு பகுதியாகவும், உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளன.

இந்த பட்டியலில் கூகுள் நிறுவனமும் இடம் பிடித்துள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 3 ஆம் வாரத்தில் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கும் அதிரடி முடிவை கூகுள் நிறுவனம் எடுத்தது. 

இந்த அதிர்ச்சியில் இருந்து பணியாளர்கள் மீள்வதற்குள் கூகுள் நிறுவனம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கையை அடுத்து, பணியாளர்களுக்கான பல்வேறு சேவைகளை கைவிடுவது என்று முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஊழியர்களுக்கு பணியின்போது மசாஜ் சேவை வழங்குவது, உடலை கட்டுக்கோப்புடன் வைப்பதற்கான வகுப்புகள், பழுதடைந்த மடிகணனிக்கு பதிலாக புதிதாக ஒன்றை மாற்றி தருவது, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் ரூத் போரட் மிக அரிதிலும் அரிது என்ற வகையில், அனைத்து பணியாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

அதில், செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவது பற்றி சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதனால், 2023 ஆம் ஆண்டில் நீண்டகால சேமிப்புக்கான இலக்கை நிறுவனம் அடையும் என தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பயன்பாட்டில் உள்ள காகிதங்களை இணைக்க உதவும் ஸ்டேபிளர்கள் மற்றும் ஒட்ட பயன்படும் டேப்புகள் உள்ளிட்டவற்றையும் கூட கூகுள் நிறுவனம் வழங்காமல் அவற்றை நிறுத்தி விடுவது என முடிவு செய்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் – அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.  பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில்...

குயின்ஸ்லாந்து பார்க்கிங் அபராதம் மொத்தம் $43 மில்லியன் என மதிப்பீடு

குயின்ஸ்லாந்து வாகன ஓட்டிகள் மற்றும் நிறுவனங்கள் பார்க்கிங் தொடர்பாக செலுத்த வேண்டிய மொத்த போக்குவரத்து அபராதத் தொகை $43 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் மற்றொரு கட்டுமான நிறுவனமும் விழுந்தது

ஆஸ்திரேலியா வே என்ற மற்றொரு கட்டிட கட்டுமான நிறுவனமும் பின்னடைவை சந்தித்துள்ளது. Melbourne Point Cook இல் இயங்கிவரும்...

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் NSW

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் ஆனது. இதன் மூலம்...

விக்டோரியாவில் மற்றொரு கட்டுமான நிறுவனமும் விழுந்தது

ஆஸ்திரேலியா வே என்ற மற்றொரு கட்டிட கட்டுமான நிறுவனமும் பின்னடைவை சந்தித்துள்ளது. Melbourne Point Cook இல் இயங்கிவரும்...

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் NSW

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் ஆனது. இதன் மூலம்...