Sportsடெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி -...

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகின்றது. 

நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதின. 

இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணியின் அணித்தலைவர் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த வகையில், டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

அணியின் தொடக்க ஆட்டக்காரரரும் அணித்தலைவருமான டேவிட் வார்னர் தாக்குப்பிடித்து 37 ஓட்டங்களை எடுத்தார். 

சர்ப்ராஸ் கான் 30 ஓட்டமும், அபிஷேக் பொரெல் 20 ஓட்டமும் எடுத்தனர். 

கடைசி கட்டத்தில் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடி 36 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. 

குஜராத் சார்பில் ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. 

இதில், சாய் சுதர்ஷன் அதிகபட்சமாக 48 பந்துக்கு 62 ஓட்டங்கள் குவித்தார். தொடர்ந்து விஜய் சங்கர் 29 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 31 ஓட்டங்களும், சாஹா மற்றும் ஷூப்மன் கில் தலா 14 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 5 ஓட்டமும் எடுத்தனர். 

போட்டியின் இறுதியில் 18.1 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 163 ஓட்டங்களை எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

22 பரிந்துரைகளை செயல்படுத்தும் சட்டங்களை சீர்திருத்தும் விக்டோரியா அரசாங்கம்

குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க விக்டோரியா அரசு சட்ட அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. மெல்பேர்ண் குழந்தை பராமரிப்பு மையங்களில் Joshua Dale Brown செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

பெர்த் புதர் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான ‘ரத்தின’ சிலந்தி

பெர்த்தில் "மாணிக்கம்" போன்ற சிலந்தியின் மர்மமான மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 30 ஆண்டுகளாக இந்த இனத்தின் எந்த உயிரினரும் காணப்படவில்லை. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் Shenton...