Newsமீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் - பெயர் பட்டியலை வெளியிட்ட...

மீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் – பெயர் பட்டியலை வெளியிட்ட நாசா

-

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கான விண்வெளி வீரர்களின் பெயர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்றும் நாசா பெயர் சூட்டியுள்ளது. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்பியது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2022 நவம்பரில் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது.

நிலவுக்கு பின்பக்கத்தில் ஓரியான் எனும் கேப்ஸ்யூல் அனுப்பப்பட்டது. அது வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாசாவும், கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஏயும் (கனடியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி) இணைந்து ஆர்ட்டெமிஸ் ஐஐ திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வரிசையில் இந்த திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை அறிவித்துள்ளது.

இக்குழுவில் நாசா வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா ஹாமக் கோச், கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வீரர் ஜெரமி ஹான்சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் ஒரு பெண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நிலவுக்குச் செல்லும் வீரர்கள் குழுவில் கனடா விண்வெளி வீரர் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார். ஒரு கறுப்பின வம்சாவளி வீரரும் இருக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...