Newsஇணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

இணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

-

திருடப்பட்ட கணக்கு விவரங்களை பணத்திற்கு விற்பதற்காக இணையதளம் நடத்திய குற்றச்சாட்டில் 10 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 70,000 பேர் இந்த இணையதளத்தை அணுக அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்படாத கணக்கு விவரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டுச் சோதனையானது அமெரிக்க FBI உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையால் நடத்தப்பட்டது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, சுமார் 36,000 ஆஸ்திரேலியர்கள் இந்த வர்த்தகத்தில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய நிறுவனங்களான Optus – Medibank மற்றும் Latitude Financial Services மீது நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்களுக்கும் இந்த மோசடி இணையத்தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் பின்னணியில் ரஷ்யா மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

One Nation-இல் சேர Branaby Joyce-இற்கு அழைப்பு!

முன்னாள் துணைப் பிரதமர் Branaby Joyce-ஐ One Nation-இல் சேர Pauline Hanson அழைப்பு விடுத்துள்ளார். Branaby சமீபத்தில் தேசியக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தனக்கும்...

Bluesky-உடன் இணையும் வெள்ளை மாளிகை

எலோன் மஸ்க்கின் "X" சமூக ஊடக தளத்திற்கு போட்டியாளரான Bluesky-உடன் வெள்ளை மாளிகை இணைந்துள்ளது. அதன் முதல் பதிவாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து பல்வேறு மீம்ஸ்கள்,...

டிரம்பை சந்திக்க செல்கிறார் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாளை வெள்ளை மாளிகைக்கு சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் காணொளி குறித்து கிரிக்கெட் உலகில் சில விவாதங்கள் நடந்தன. இந்த சர்ச்சைக்குரிய காணொளி, கைகுலுக்காததற்காக இந்தியாவை கேலி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ஆசிய...