Newsஉலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

உலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

-

உலகளவில் ஆறு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சுகாதார அமைப்பு கருவுறுதல் பராமரிப்புக்கான அணுகல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பங்கேற்றுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உலகளவில் ஆறு பேரில் ஒருவர் குழந்தை பெற இயலாமையால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 17.5 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணக்கார நாடுகளில் 17.8 சதவீதம் பேரும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 16.5 சதவீதம் பேரும் குழந்தை பெற இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சனையானது உலகளவிலான மிகப்பெரிய சுகாதார துறை சவாலாக மாறியுள்ளது.

பல நாடுகளின் தரவுகள் இல்லாததால், முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை.

எனவே இனப்பெருக்க சுகாதார கொள்கைகள், சேவைகள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை குழந்தையின்மை சிகிச்சையில் சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் நடக்கும் மோசடி

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மிகவும் பொதுவானதாகி வருகிறது. அதனுடன், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரநிலைகளை...

அழிந்துவரும் மூன்று கங்காரு இனங்கள் அடையாளம்

ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அழிந்து வரும் மூன்று வகையான கங்காருக்களை அடையாளம் கண்டுள்ளது. 5 மில்லியன் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்...

நாய்களுக்கும் எளிதான ஒரு சிறப்பு விமான நிறுவனம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று நாய்களுக்காக மட்டுமே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி பார்க் ஏர் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழு

மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆசிரியர் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் தொழில்முறை நடவடிக்கையை அணுகுவதாக கூறுகின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வேலைநிறுத்தப்...