Sports சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. 

10-வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ஓட்டத்திலும், ஆரம்ப ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ஓட்டத்திலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உட்பட 21 ஓட்டங்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ஓட்டத்தில் அவுட்டானார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

ஆரம்ப ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ஓட்டத்திலும், தீபக் ஹூடா ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ஓட்டத்தில் அவுட்டானார். அணித்தலைவர் கே.எல்.ராகுல் 35 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் – அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.  பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில்...

குயின்ஸ்லாந்து பார்க்கிங் அபராதம் மொத்தம் $43 மில்லியன் என மதிப்பீடு

குயின்ஸ்லாந்து வாகன ஓட்டிகள் மற்றும் நிறுவனங்கள் பார்க்கிங் தொடர்பாக செலுத்த வேண்டிய மொத்த போக்குவரத்து அபராதத் தொகை $43 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் மற்றொரு கட்டுமான நிறுவனமும் விழுந்தது

ஆஸ்திரேலியா வே என்ற மற்றொரு கட்டிட கட்டுமான நிறுவனமும் பின்னடைவை சந்தித்துள்ளது. Melbourne Point Cook இல் இயங்கிவரும்...

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் NSW

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் ஆனது. இதன் மூலம்...

விக்டோரியாவில் மற்றொரு கட்டுமான நிறுவனமும் விழுந்தது

ஆஸ்திரேலியா வே என்ற மற்றொரு கட்டிட கட்டுமான நிறுவனமும் பின்னடைவை சந்தித்துள்ளது. Melbourne Point Cook இல் இயங்கிவரும்...

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் NSW

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் ஆனது. இதன் மூலம்...