Sportsபஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் - IPL 2023

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் – IPL 2023

-

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. 

முதலில் பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாட அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 99 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சாம் கர்ரன் 22 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடியது. 

தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 13 ஓட்டங்கள், மயங்க் அகர்வால் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ராகுல் திரிபாதி , மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர். 

ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். 

இறுதியில்17.1 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

திரிபாதி 74 ஓட்டங்கள் , மார்க்ரம்37 ஓட்டங்கள் எடுத்து அட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.

நன்றி தமிழன்

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...