Sportsரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -...

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

முதலில் துடுப்பெடுத்தாட பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை குவித்தது. 

டூ பிளெசிஸ் 79 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார். தீபக் ஹூடா 9 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா டக் அவுட்டானார். கே.எல்.ராகுல் 18 ஓட்டத்தில் வெளியேறினார். 

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடினார். 

அவர் 30 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 65 ஓட்டம் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

அடுத்து இறங்கிய பூரன், பதோனி ஜோடி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பூரன் 15 பந்தில் அரை சதம் கடந்தார். 

அவர் 19 பந்தில் 62 ஓட்டத்தில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி கடைசி கட்டத்தில் 30 ஓட்டத்தில் எடுத்தார். 

இறுதியில், லக்னோ அணி 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டத்தில் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...