சக்திவாய்ந்த Ilsa சூறாவளியை எதிர்கொள்ளும் வகையில், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆபத்தான இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட பல தரப்பினர் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
தற்போது புரூமில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ள இந்த புயல் அடுத்த சில மணி நேரத்தில் நாட்டிற்குள் நுழையும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆஸ்திரேலியாவை 4-வது புயல் தாக்கியது.
இந்த புயல் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால், அபாய பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் தாக்கம் பல நாட்களுக்கு நீடிக்கும் என மேற்கு ஆஸ்திரேலியா மாநில அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.