Sports3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான்...

3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி – IPL 2023

-

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின.

இந்தப் போட்டி சென்னையின் அணித்தலைவர் தோனிக்கு 200வது போட்டியாகும்.

அதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களில் அவுட்டானார். ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக ஆடினார். இதனால் ஓட்டம் வேகம் அதிகரித்தது.

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ஜடேஜா இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பட்லர் அரை சதமடித்தார். அவர் 52 ஓட்டத்தில் அவுட்டானார். அஸ்வின் 30 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை எடுத்துள்ளது.

ஹெட்மயர் 30 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். தோனி 32 ஓட்டங்கள், தொடர்ந்து ரகானே31 ஓட்டங்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ஓட்டங்களும், அலி 7 ஓட்டங்களும், ஜடேஜா 25 ஓட்டங்களும், ராயுடு ஒரு ஓட்டங்கள் எடுத்தனர்.

இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற மிக வயதான நபர்

45 வயதான Venus Williams, Wildcard நுழைவு பெற்ற பிறகு ஆஸ்திரேலிய ஓபனுக்கு மீண்டும் திரும்ப முடிந்தது. இந்த வாய்ப்பின் காரணமாக, பிரதான சுற்றில் பங்கேற்ற மிக...