நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, மெல்போர்ன் நகரின் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை மாலை 06:00 மணி முதல் இன்று காலை 07:00 மணி வரை, விக்டோரியா அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சுமார் 100 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை கட்டிட சேதம் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பானவை.
காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என விக்டோரியா அவசர சிகிச்சை பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், யர்ரா ஆற்றில் மிக சிறிய வெள்ள நிலைமை உருவாகியுள்ளது.